Sunday, March 22, 2015

கருத்துக்கணிப்பு

ஜெர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கினால் போதும். • பிரான்ஸில் மேஜைத் துணி மேல் எதையும் சிந்திக் கறைபடுத்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்கள் ஹோட்டல் சர்வர்கள். • இங்கிலாந்தில் குளிர்காலத்தில் சாலைகளில் பனி உறைந்து போயிருக்கும்போது, பனிக்கட்டியை உருகி ஓடச் செய்யும் பொருட்டு அதன் மீது உப்பைத் தெளிப்பார்கள்.



நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் சுரப்பி, சில சிறுத்தைகளுக்கு மிக அதிகமாகச் சுரப்பதால் அவை கறுப்பு நிறத்தில் இருக்கும். அவற்றுக்கு கருஞ்சிறுத்தைகள் என்று பெயர். • எஸ்கிமோக்களின் வீடுகளை இக்ளூ என்பர். குளிர்காலத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு வேட்டையாடச் செல்லும்போது, தாற்காலிகமாகக் கட்டிக் கொள்ளும் வீடுகள்தான் இக்ளூ எனப்படும். மற்ற நேரங்களில் திமிங்கல எலும்பு, விலங்குகளின.் தோல், மரத்துண்டுகளைக் கொண்டு வீடு கட்டி, தரையில் புற்களைப் பரப்பிக கொள்வர்.



ரஷ்யாவில் குழந்தை பிறக்கும்போது அது ஆணா, இல்லை பெண்ணா என்று கேட்பதில்லை. எத்தனை கிலோ எடை என்றுதான் கேட்கிறார்கள். * வட அமெரிக்காவில் வாழும் மூஸ் எனும் மான் இனம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் தன் கொம்புகளை உதிர்த்து விடும். பின்னர் வசந்த காலத்தில் மறுபடியும் கொம்பு வளர்ந்து விடும். • ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் அல்பைன் ஐபெக்ஸ் என்ற மலை ஆடுகள் செங்குத்தான பாறைகளில் ஏறுவதில் தேர்ந்தவை. சுமார் 15,000 அடி உயரத்தில்தான் வசிக்கும். 

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!

படித்து பிறருக்கும் பகிருங்கள்.. அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!! 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு.. சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது.

அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால். 90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல். 63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல். 18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம். 226,80,00,000×10 = 2,268,00,00,000. வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள். ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..? இப்போது சொல்லுங்கள்